ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமத்தில் ஆவக்குடி குளம் உள்ளது. இந்த குளத்தின் கரைகள் சேதமடைந்து இருக்கிறது. இதனால் தண்ணீர் தேக்கமுடியாத நிலை உள்ளது. மேலும்,குளம் முழுவதும் செடி,கொடிகள் வளர்ந்து புதர்மண்டி கிடக்கிறது. இதனால் அந்த பகுதியை சேர்ந்த விவசாயிகள் குளத்துநீரை பயன்படுத்த முடியாத சூழல் உருவாகி உள்ளது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குளத்தை தூர்வார நடவடிக்கை எடுக்க வேண்டும்.