தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அடுத்த புலிக்கரை அஞ்சல் அல்லியூர் மற்றும் சங்கம்பட்டிக்கு இடையே தேசிய நெடுஞ்சாலைக்கு அருகே குழாய் உடைந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. மேலும் சாலையில் குளம்போல் தண்ணீர் தேங்கி நின்று போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறது. இதனால் விபத்துகள் ஏற்படவும் வாய்ப்பு உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சேதமடைந்த குழாயை சீரமைத்து குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-வேலு, பாலக்கோடு.