தஞ்சையை அடுத்த அய்யம்பேட்டை பகுதியில் இலுப்பகோரை கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் உள்ள பஸ் நிறுத்தம் எதிரே குடிநீர் குழாய் உள்ளது. இந்த குழாய் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்து இருக்கிறது. இதனால் குழாயில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் குழாயை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.