தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி பஸ் நிலையத்தில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் உள்ளது. இந்த நிலையம் கடந்த சில நாட்களாக பழுதடைந்து காணப்படுகிறது. பஸ் நிலையத்திற்கு வரும் பயணிகள் ஒரு லிட்டர் குடிநீர் ரூ.20-க்கு வாங்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பயணிகள் பெரும் சிரமம் அடைகின்றனர். சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை சீரமைக்க பொதுமக்கள் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பழுதடைந்த சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தை ஆய்வு செய்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
- சாமிக்கண்ணு, மாரண்டஅள்ளி.