சீரான குடிநீர் தேவை

Update: 2025-09-07 08:42 GMT

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பெருவிளை பகுதியில் மாவிளை தெரு உள்ளது. இந்த தெருவில் சுமார் 25-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த தெருவில் மாநகராட்சியில் இருந்து வினியோகிக்கப்படும் குடிநீர் சீரான முறையில் கிடைப்பதில்லை. குடிநீர் வரும் நாட்களில் குழாயில் மிகவும் குறைவாக வடிகிறது. இதனால் பெண்கள் குடிநீர் பிடிப்பதற்காகவே பல மணிநேரத்தை செலவிட வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். எனவே, பொதுமக்கள் நலன்கருதி சீரான முறையிலும், குழாய்களில் வேகமாக குடிநீர் வரும் வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்