தர்மபுரி மாவட்டம் மாரண்டஅள்ளி அடுத்த அமானி மல்லாபுரம் சாலையில் நீண்ட நாட்களாக ஒகேனக்கல் கூட்டுக்குடிநீர் குழாய் உடைந்து தண்ணீர் வீணாக சாலையில் செல்கிறது. இதனால் அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரில் கொசுக்கள் உற்பத்தியாகி நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இது பற்றி பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட்டதாக தெரியவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
-சாமுவேல், மாரண்டஅள்ளி.