கரூர் மாவட்டம் தளவாபாளையம் பகுதியில் இருந்து விவசாயத்திற்கான பாசன வாய்க்கால் நொய்யல், வேலாயுதம்பாளையம், கடம்பங்குறிச்சி வழியாக வாங்கல் வரை செல்கிறது. வெற்றிலை, கரும்பு, கோரை, வாழை சாகுபடிக்கு இந்த பாசன வாய்க்காலை நம்பி தான் இப்பகுதி விவசாயிகள் உள்ளனர். இந்நிலையில் பாலத்துரை மற்றும் தளவாபாளையம் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகள் வளர்ந்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளது. இதனால் விவசாய பணிகளுக்கு தண்ணீர் கிடைக்காமல் விவசாயிகள் மிகவும் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுத்து வாய்க்காலை ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.