சேலம் 4 ரோடு பெரமனூரில் உள்ளது தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதிவாரியம். இங்கு பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பொது குடிநீர் குழாய் பிரதான சாலையின் ஓரத்தில் உள்ளது. ஒவ்வொரு முறை தண்ணீர் வரும்போதும் குடிநீர் குழாய் இணைப்பில் இருந்து தண்ணீர் வெளியேறி சாலையில் வீணாக செல்கிறது. இதனால் குடிநீர் குழாயில் தண்ணீர் குறைந்த அளவு வருகிறது. இதன் காரணமாக அங்குள்ளவர்களுக்கு தேவையான தண்ணீர் கிடைப்பதில்லை. அங்குள்ள பொதுமக்கள் குடிநீரை விலைக்கு வாங்கி பயன்படுத்தி வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்களிடம் முறையிட்டும் பலனில்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி அதிகாரிகள் இந்த பிரச்சினைக்கு தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சசிராஜா, பெரமனூர், சேலம்.