குடிநீர் தொட்டி சீரமைக்கப்படுமா?

Update: 2025-08-24 13:57 GMT

திருவள்ளூர் மாவட்டம் திருவாலங்காடு ஒன்றியம் பெரிய களக்காட்டூர் கிராமத்தில் சுமார் 500-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இந்த கிராமத்தில் பொதுமக்கள் பயன்படுத்தி வந்த குடிநீர் தொட்டியின் மேற்பூச்சு விழுந்து கான்கிரீட் கம்பிகள் தெரியும்படி பரிதாபமாக இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் இந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அச்சம் நிலவுகிறது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் பொதுமக்களுக்கு எந்த ஆபத்தும் ஏற்படுவதற்கு முன்பே அதனை சீரமைக்க உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்