பயன்படாத குடிநீர் தொட்டி

Update: 2025-08-24 13:22 GMT

மொரப்பூர் ஊராட்சி ஒன்றியம், கெலவள்ளி ஊராட்சிக்கு உட்பட்டது சின்னமாவடிப்பட்டி. இந்த பகுதியில் பொதுமக்களின் குடிநீர் தேவையை நிறைவேற்றும் பொருட்டு குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு தண்ணீர் வினியோகம் செய்யப்பட்டு வந்தது. நாளடைவில் மின் மோட்டார் மற்றும் குடிநீர் தொட்டி ஆகியவை பழுதடைந்தது. இதனால் அந்த குடிநீர் தொட்டி பயன்பாடு இல்லாமல் போய்விட்டது. மேலும் பொதுமக்கள் குடிநீர் இல்லாமல் மிகவும் அவதிப்பட்டு வருகிறார்கள். எனவே பழுதடைந்த மின் மோட்டார், குடிநீர் தொட்டியை சீரமைத்து சீரான குடிநீர் வழங்க உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராமஜெயம், கம்பைநல்லூர்.

மேலும் செய்திகள்