வீணாகும் குடிநீர்

Update: 2025-08-24 07:39 GMT

ஆத்திவிளை ஊராட்சிக்கு உட்பட்ட மேல்பரம்பையில் இருந்து பரம்பை ஊருக்கு செல்லும் கான்கிரீட் சாலையோரத்தில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு குடிநீர் வீணாகி சாலையில் பாய்கிறது. இதனால் அந்த வழியாக செல்லும் பாதசாரிகள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, குழாய் உடைப்பை சரிசெய்து குடிநீர் வீணாவதை தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-சிவராம், பரம்பை.

மேலும் செய்திகள்