கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டி தாலுகா நாட்றம்பாளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஏத்தகிணறு கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கு செல்லும் சாலையில் ஒவ்வொரு முறை மழை பெய்யும் போதும் தண்ணீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. 30-க்கும் மேற்பட்ட பள்ளி குழந்தைகள், வாகன ஓட்டிகள், பெரியவர்கள் இந்த சாலையை தினமும் பயன்படுத்துகின்றனர். அந்த தேங்கிய தண்ணீர் வடிவதற்கு 20 முதல் 25 நாட்கள் ஆகின்றன. கடந்த 3 ஆண்டுகளாக இதே நிலைமை நீடிக்கின்றது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் பெற்றோர் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பரமசிவம், ஏத்தகிணறு.