திருவள்ளூர் மாவட்டம், பூந்தமல்லி வட்டம் அணைக்கட்டுச்சேரி கிராமம் சோராஞ்சேரி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பகுதிகளுக்கு குடிநீர் ஆதாரமாக இருக்கும் ஆற்றின் கரையோரமாக ஆவடி நகராட்சியின்குப்பைகள் கொட்டப்படுகிறது. இதனால் அந்த குடிநீர் கழிவுநீராக மாறும் அவலநிலை நிலவுகிறது. மேலும் இறைச்சி கழிவுகளும் அதனுடன் சேர்த்து கொட்டப்படுவதால், அந்த பகுதி முழுவதும் மிகவும் துர்நாற்றம் ஏற்படுகிறது. இதனால் அந்த பகுதிமக்கள் மிகவும் அவதியடைகிறார்கள். எனவே குடிநீர் கழிவுநீராக மாறுவதை தடுக்கும் விதமாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும்.