சித்தேரி ஏரி ஆக்கிரமிப்பை அகற்ற வேண்டும்

Update: 2025-08-17 11:57 GMT

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் முத்துசேர்வாமடம் ஊராட்சியில் கங்கவடங்கநல்லூர் கிராமத்தில் உள்ள முக்கியமான நீர்நிலைகளில் சித்தேரி ஏரியும் ஒன்று. இந்த ஏரியில் கடந்த சில வருடங்களாகவே ஒரு சிலர் சுமார் இரண்டு ஏக்கருக்கும் அதிகமாக ஆக்கிரமித்து வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடியாக நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்றி, கரைகளை பலப்படுத்தி குளிப்பதற்கு தேவையான இடங்களில் படிக்கட்டுகளை அமைத்து தூர் வார நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மேலும் செய்திகள்