திருச்சி மாவட்டம் அதவத்தூர் அருகே கொய்யாத்தோப்பு கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். கடந்த சில மாதங்களாகவே இப்பகுதியில் அடிக்கடி குடிநீர் வினியோகம் நிறுத்தப்படுவதுடன், தற்போது தொடர்ச்சியாக ஒருவார காலமாக காவிரி குடிநீர் வினியோகம் சுத்தமாக நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இக்கிராம மக்கள் அருகில் உள்ள ஊர்களுக்கு சென்று குடிநீர் எடுத்துவரும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. இதேபோல் மழைபெய்ய ஆரம்பிக்கும்போது நிறுத்தப்படும் மின்சாரம், மழைநின்ற பிறகும் வருவதில்லை. இதனால் அனைத்து தரப்பு மக்களும், குழந்தைகளும் மிகவும் சிரமத்திற்கு ஆளாகின்றனர். எனவே சம்பந்தபட்ட அதிகாரிகள் இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.