நடவடிக்கை எடுக்க வேண்டும்

Update: 2025-08-17 07:06 GMT

குலசேகரபுரம் ஊராட்சியில் ஒசரவிளையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பிளாஸ்டிக் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியை அப்பகுதி மக்கள் மற்றும் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகளும் பயன்படுத்தி வந்தனர். தற்போது இந்த தொட்டி உடைந்த நிலையில் காணப்படுகிறது. இதனால் கடந்த 3 மாதங்களாக தொட்டியில் குடிநீர் ஏற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த பகுதி மக்களும், வாகன ஓட்டிகளும் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சேதமடைந்து காணப்படும் குடிநீர் தொட்டியை அதிகாரிகள் சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்