கோத்தகிரி கடைவீதி பகுதியில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்கு வசிப்பவர்களுக்கு மோட்டார் பழுது காரணமாக கடந்த ஒரு வார காலமாக குடிநீர் வினியோகம் தடைபட்டு உள்ளது. இதனால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு அவர்கள் கடும் அவதிப்பட்டு வருகிறார்கள். மேலும் விலை கொடுத்து வாங்கி குடிநீரை பயன்படுத்தும் நிலை உள்ளது. எனவே உடனடியாக மோட்டார் பழுதை நீக்கி சீராக குடிநீர் வினியோகம் செய்ய நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.