வெண்ணந்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் அருகே மற்றும் காவல் நிலையம் அருகே பூலாம்பட்டி கூட்டு குடிநீர் திட்ட குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீர் சாலையில் ஓடி வீணாகிறது. இதனால் சாலை சேதமாகி குண்டும், குழியுமாக காட்சி அளிக்கிறது. இதுகுறித்து சம்பந்தப்பட்ட துறையினர் கவனத்தில் கொண்டு விரைந்து உடைந்த குழாயை செய்ய துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
-ஆதவ், வெண்ணந்தூர்.