குடிநீர் வருமா?

Update: 2025-07-27 19:18 GMT


திருப்பூர் வாலிபாளையம் பகுதியில் உள்ள குடியிருப்புகளில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகிறார்கள். இங்கு வாரத்துக்கு ஒரு முறை குடிநீர் வந்தது. ஆனால் தற்போது 15 நாட்களுக்கு மேலாகியும் குடிநீர் வரவில்லை. இதனால் அப்பகுதியல் வசிக்கும் மக்கள் அன்றாட தேவைகளுக்கு தண்ணீரின்றி மிகவும் சிரமப்பட்டு வருகிறார்கள். எனவே மாநகராட்சி அதிகாரிகள் வாலிபாளையம் பகுதிக்கு சீராக குடிநீர் வினியோகம் செய்ய நடவடிக்கை எடுப்பார்களா?

கர்ணன், வாலிபாளையம்.

மேலும் செய்திகள்