சாலையில் வீணாகும் தண்ணீர்

Update: 2025-07-27 18:29 GMT

சேலம் 4 ரோடு பெரமனூரில் தமிழ்நாடு நகர்ப்புற வீட்டு வசதி வாரியம் உள்ளது. இந்த பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவைக்காக சாலையோரம் குடிநீர் குழாய் மூலம் வாரம் ஒரு முறை தண்ணீர் வினிேயாகிக்கப்படுகிறது. தண்ணீர் வரும் நேரங்களில் சாலையில் உள்ள இணைப்பு பகுதியில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாக செல்கிறது. இதனால் அந்த பகுதி மக்களுக்கு போதிய அளவு தண்ணீர் கிடைப்பது இல்லை. வாரம் ஒரு முறை வழங்கப்படும் குடிநீர் இப்படி பொதுமக்களுக்கு கிடைக்காமல் சாலையில் வீணாக செல்கிறதே? என அவர்கள் வருத்தமடைகின்றனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தண்ணீர் வீணாவதை தவிர்க்க நடவடிக்கை எடுப்பார்களா?

-இளங்கோவன், பெரமனூர்.

மேலும் செய்திகள்