ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும்

Update: 2025-07-27 18:15 GMT

நல்லம்பள்ளி ஒன்றியம் இண்டூர் ஊராட்சிக்குட்பட்ட இண்டூர் செங்குந்தர் மயானம் பின்புறம் 10-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. குடிநீர் வசதி இல்லாமல் அப்பகுதியினர் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். இங்குள்ள குடியிருப்புகளுக்கு ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்று ஆழ்துளை கிணற்றிலிருந்து குடங்களை தலையில் சுமந்து தண்ணீர் பிடித்து வர வேண்டிய அவல நிலை உள்ளது. இப்பகுதி மக்களுக்கு பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி இல்லை. இப்பகுதிக்கு செங்குந்தர் மயானம் அருகில் உள்ள நீர்த்தேக்க தொட்டியில் இருந்து குழாய் பதித்து ஒகேனக்கல் குடிநீர் வழங்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

-ஜி.சிவாஜி, இண்டூர்.

மேலும் செய்திகள்