புதுவை மக்களின் குடிநீர் பிரச்சினையை தீர்க்க மலிவு விலையில் சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் வழங்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் அரை நாள் மட்டுமே செயல்படுகிறது. அதுவும் மதியம் 12 மணிக்கு முன்னதாகவே இந்த சுத்திகரிப்பு நிலையம் மூடப்படுவதால், தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. இதனால் தனியாரிடம் அதிக விலை கொடுத்து தண்ணீர் வாங்கும் நிலை உள்ளது. இதை தவிர்க்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.