குடிநீர் பிரச்சினை

Update: 2025-07-20 17:06 GMT

சேலம் தொங்கும் பூங்கா அருகே குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி வெளிபுறத்தில் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ஒரு குடிநீர் குழாய் உள்ளது. சுற்று வட்டார பொதுமக்கள், வாகன ஓட்டிகள் தண்ணீர் பிடித்து வந்தனர். தற்போது அந்த பகுதியில் பராமரிப்பு பணிக்காக குழி தோண்டப்பட்டது. இதனால் அந்த குடிநீர் குழாயில் தண்ணீர் வருவது கிடையாது. இதனால் பொதுமக்கள் குடிநீர் பிடிக்க முடியாமல் அவதிபடுகிறார்கள். மேலும் தண்ணீருக்காக நீண்ட தூரம் செல்ல வேண்டி உள்ளது. எனவே பொதுமக்கள் நலனை கருதி விரைந்து பணிகளை மேற்கொண்டு குடிநீர் வர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-பொதுமக்கள், சங்கர் நகர், சேலம்.

மேலும் செய்திகள்