சேலம்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள ஆண்டகளூர்கேட் பகுதியில் இருந்து நாமக்கல் வரை முக்கியமான பஸ் நிறுத்தங்களில் அருகே தண்ணீர் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் சில ஆண்டுகளாக அந்த தண்ணீர் தொட்டியில் சம்பந்தப்பட்டவர்கள் தண்ணீர் நிரப்பி வைப்பதில்லை. இதனால் பயணிகள், பாதசாரிகள் தண்ணீர் இன்றி சிரமம் அடைகின்றனர். எனவே காட்சி பொருளாக உள்ள தண்ணீர் தொட்டியில் நீர் நிரப்பி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என்பதை பயணிகளின் கோரிக்கையாக உள்ளது.
-ராஜேஷ், நாமக்கல்.