திருப்பூர் பெத்திசெட்டிபுரம் முதல் வீதியின் நொய்யலாற்றைக் கடக்கும் இடத்தில் பிரதான குடிநீர் குழாய் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குடிநீர் குழாயில் உடைப்பு தண்ணீர் வீணாகி வருகிறது. கடந்த ஒரு மாத்திற்கும் மேலாக தண்ணீர் விணாகுவதால் சம்பந்தப்பட்ட பகுதிகளுக்கு சீராக குடிநீர் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டு உள்ளது. அதனால் உடைந்த குடிநீர் குழாைய சீரமைத்து பொதுமக்களுக்கு தங்கதடையின்றி குடிநீர் கிடைக்க சம்பந்தப்பட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்குமா?
ரத்தினசாமி, திருப்பூர்.