சேலம் 4 ரோடு பெரமனூா் வீட்டு வசதி வாரியத்தில் மின் கம்பம் உள்ளது. இதன் அருகே ஆழ்துளை குடிநீர் தொட்டி மின்மோட்டார் இணைப்புடன் இருந்தது. இந்தநிலையில் மழையால் அந்த மின்கம்பம் சாய்ந்்தது. இதையடுத்து மின்வாரிய அதிகாரிகள் கம்பத்தை அகற்றி புதிய கம்பத்தை நட்டனர். ஆனால் அந்த கம்பத்திற்கு மின்இணைப்பு வழங்காமலும், ஆழ்துளை குடிநீர் குழாயில் தண்ணீர் வராமலும் இருந்தது. இந்தநிலையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து மின்கம்பத்திற்கு மின் இணைப்பு கொடுத்து, புதிய குடிநீர் தொட்டி அமைத்தனர். இதனால் செய்தி வெளியிட உதவிய ‘தினத்தந்தி’க்கும், அதிகாரிகளுக்கும் அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்து உள்ளனர்.
-பொதுமக்கள், பெரமனூர், சேலம்.