மாணவ, மாணவிகள் அவதி

Update: 2025-07-06 19:33 GMT

எலச்சிபாளையம் அடுத்த 65 நல்லிபாளையம் ஊராட்சி புதுப்பாளையம் பகுதியில் அரசு நடுநிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் மாணவ, மாணவிகள் பயன்பாட்டுக்காக மின் மோட்டாருடன் குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது. பின்னர் இது பழுதானதால் தண்ணீர் இல்லாமல் மாணவர்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதுகுறித்து ஊராட்சி அலுவலரிடம் பல முறை புகார் அளித்தும் இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே மாணவர்களின் நலன் கருதி அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து மாணவர்களுக்கு குடிநீர் தட்டுப்பாடின்றி கிடைக்க முன்வருவார்களா?

ராஜ், எலச்சிபாளையம்.

---

மேலும் செய்திகள்