ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

Update: 2025-05-25 13:25 GMT

ஒரத்தநாடு அருகே தெக்கூர் கிராமம் தொடக்கப் பள்ளி பகுதியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டி முறையான பராமரிப்பின்றி காணப்படுகிறது. தொட்டியை தாங்கி பிடித்துள்ள தூண்களில் விரிசல்கள் ஏற்பட்டு இரும்பு கம்பிகள் வெளியே தெரிகிறது. இதனால் மேல்நிலை நீர்த்தேக்கதொட்டியின் உறுதித்தன்மை கேள்விக்குறியாகி எப்போது வேண்டுமானாலும் விழுந்து விடும் நிலையில் இருந்து வருகிறது. எனவே,சம்பந்தப்பட்ட அதிகாரிகள் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்