காட்பாடி செங்குட்டை பகுதியில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி சுத்தம் செய்யப்படுமா ? என தினத்தந்தி புகார் பெட்டியில் செய்தி வெளியானது. இந்தச் செய்தி எதிரொலியால் மாநகராட்சி அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து நீர்த்தேக்கத் தொட்டியைச் சுத்தம் செய்தனர். நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்ட தினத்தந்திக்கும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.
-பி.துரை, செங்குட்டை.