திருநாவலூர் அருகே பெரியார் நினைவு சமத்துவபுரம் குடியிருப்பில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டி பயன்பாட்டுக்கு வராமல் காட்சிப்பொருளாக உள்ளது. இதனால் அப்பகுதி மக்களுக்கு போதுமான அளவுக்கு குடிநீர் கிடைக்காததால் அவர்கள் பெரும் சிரமம் அடைந்து வருகின்றனர். இதை தவிர்க்க கட்டி முடிக்கப்பட்ட குடிநீர் தொட்டியை விரைந்து பயன்பாட்டிற்கு கொண்டுவர வேண்டும்.