கோபி அருகே கள்ளிப்பட்டி சி.கே.கே.நகர் கனரா வங்கி வீதியில் மழைநீர் குளம்போல் தேங்கி நிற்கிறது. இதனால் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே செல்ல சிரமப்படுகிறார்கள். தண்ணீரில் நடந்து செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு நோய் பரவ வாய்ப்புள்ளது. எனவே கனரா வங்கி வீதியில் மழை நீர் வடிகால் வசதி ஏற்படுத்தி தர அதிகாரிகள் முன்வர வேண்டும்.