வீணாகும் குடிநீர்

Update: 2025-05-11 10:38 GMT

கூடலூரில் இருந்து ஓவேலி செல்லும் சாலையோரத்தில் வனத்துறை சோதனைச்சாவடி அருகே உள்ள நகராட்சி குடிநீர் குழாயில் பல இடங்களில் விரிசல் ஏற்பட்டு உள்ளது. அதில் இருந்து குடிநீர் வெளியேறி வீணாகி வருகிறது. இந்த குடிநீர் புதர்களுக்கு இடையே செல்லும் குழாயில் இருந்து வெளியேறி வீணாவதால் வெளியே தெரிவதில்லை. கோடை காலத்தில் இப்படி குடிநீர் வீணாவது காண்போரை வேதனை அடைய செய்கிறது. எனவே சம்பந்தப்பட்ட துறையினர் ஆய்வு செய்து, குழாய் உடைப்பை சரி செய்து, குடிநீர் வீணாவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்