விபத்து அபாயம்

Update: 2025-05-11 06:45 GMT

கொட்டாரம் பேரூராட்சிக்கு உட்பட்ட பெருமாள்புரத்தில் இசக்கியம்மன் கோவில் மண்டப சன்னிதானத்தில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்தேக்க தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இந்த தொட்டியின் இரண்டு கான்கிரீட் தூண்களில் விரிசல் ஏற்பட்டு காணப்படுகிறது. இதனால் எப்போது வேண்டுமானாலும் நீர்தேக்க தொட்டி இடிந்து விழுந்து அந்த வழியாக செல்லும் பொதுமக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி மேல்நிலை நீர்தேக்க தொட்டியை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-ராம்தாஸ், சந்தையடி.

மேலும் செய்திகள்