தியாகதுருகத்தில் -விருகாவூர் செல்லும் சாலையில் இருந்து சித்தலூர் பெரியநாயகி அம்மன் கோவிலுக்கு செல்லும் பிரிவு சாலையில் குளம் உள்ளது. தனியார் ஆலையில் இருந்து வெளியேறும் கழிவுநீர் இந்த குளத்தில் கலப்பதால் தண்ணீர் மாசடைந்து வருகிறது. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதோடு, விவசாய பணிகளும் பாதிக்கப்படும் அபாயம் உருவாகி உள்ளது. இதை தவிர்க்க அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம்.