தர்மபுரி இலக்கியம்பட்டி பகுதியில் இருக்கும் வீடுகளில் உள்ள தண்ணீர் இணைப்புகளுக்கு ஊராட்சி மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதற்கு பயன்படுத்தும் மோட்டார் பழுதடைந்ததால் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக வி.பி.சிங் தெரு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் தண்ணீர் வினியோகம் தடைபட்டுள்ளது. இதனால் இந்த பகுதியில் வசிக்கும் மக்கள் தண்ணீர் கிடைக்காமல் சிரமத்திற்கு உள்ளாகி வருகிறார்கள். எனவே மின் மோட்டாரை சீரமைத்து மீண்டும் தண்ணீர் வழங்க விரைவான நடவடிக்கை எடுப்பார்களா?
-மணிவண்ணன், இலக்கியம்பட்டி.