திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம், ஆதனூர் ஊராட்சி கீரிப்பட்டி கிராமத்தில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில் இப்பகுதியில் ரூ.13 லட்சத்தில் புதிதாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. இந்நிலையில் இந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டு ஓராண்டு ஆகியும் இன்னும் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படாமல் உள்ளது. இதனால் இப்பகுதி மக்கள் கோடை காலத்தில் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.