கரூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டமங்கலம் ஊராட்சி முத்தனூர் பகுதி மக்களின் குடிநீர் தேவைக்காக இப்பகுதியில் சாலையோரம் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டது. இந்த நிலையில் இந்த ஆழ்துளை கிணற்றில் அமைக்கப்பட்டுள்ள மின்மோட்டாரின் வயரை மர்மநபர்கள் திருடி சென்றுவிட்டனர். இதனால் இந்த ஆழ்துளை கிணறு பயன் இன்றி உள்ளதால் இப்பகுதி மக்கள் போதிய குடிநீர் இன்றி பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.