பாலக்கோடு அருகே உள்ள மாக்கன்கொட்டாய் கிராமத்தில் உள்ள மேல்நிலை நீர்த்தேக்கதொட்டி விரிசல் அடைந்து பலவீனமாக காணப்படுகிறது. கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்பு இதற்கு மாற்றாக அதன் அருகில் புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது. ஆனால் சேதமான பழைய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்தாமலேயே விட்டுள்ளனர். இதில் இருந்து சிமெண்டு காரைகள் பெயர்ந்து விழுவதால் எந்நேரத்திலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழுமோ? என்ற அச்சத்தில் அப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். எனவே சேதமடைந்த மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியை இடித்து அப்புறப்படுத்த வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஆனந்தன், மாக்கன்கொட்டாய்.