தண்ணீர் இல்லாத குடிநீர் தொட்டி

Update: 2025-04-27 14:07 GMT

சென்னை ஆதம்பாக்கம், கிழக்கு கரிகாலன் 2-வது தெருவில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இந்த பகுதியில் பொதுமக்கள் குடி தண்ணீர் எடுக்க குடிநீர் தொட்டி ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் கடந்த 1 வருடங்களுக்கு மேலாக இந்த குடிநீர் தொட்டியில் தண்ணீர் இல்லாமல் வெறும் காட்சி பொருளாக இருக்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ள மக்கள் குடிநீர் பிடிப்பதற்கு வெகுதூரம் செல்லும் நிலை உள்ளது. எனவே, மாநகராட்சி அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் தயார் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்