ஈரோடு வில்லரசம்பட்டி 10-வது வார்டு பகுதியில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குழாயில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதன் காரணமாக கருவில்பாறை வலசு, ராசாம்பாளையம் சாலை பகுதிகளில் கடந்த 3 நாட்களாக குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைப்பட்டுள்ளது. அந்த பகுதி மக்கள் அன்றாட தேவைக்கு கூட குடிநீர் இன்றி சிரமப்படுகின்றனர். எனவே குழாய் உடைப்பை சரிசெய்து கருவில்பாறை வலசு, ராசாம்பாளையம் சாலை பகுதிகளில் குடிநீர் வழங்க அதிகாரிகள் முன்வர வேண்டும்.