ராமநாதபுரம் மாவட்டம் அச்சுந்தன்வயல் ஊராட்சி தேவேந்திரர் நகரில் இரண்டு ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் குடிநீர் குழாய் அமைக்கும் பணி நடந்து முடிந்துவிட்டது. ஆனால் வீடுகளுக்கு இன்று வரை குடிநீர் இணைப்பு வழங்கப்படவில்லை. இதனால் அப்பகுதி மக்கள் குடிநீர் இன்றி அவதியடைகின்றனர். எனவே மேற்கண்ட பகுதியில் குடிநீர் இணைப்பு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?