மயிலாடுதுறை டவுன் விரிவாக்க பகுதி கிராம பஞ்சாயத்து பிரதான சாலையில் குடிநீர் குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த குடிநீர் குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு குடிநீர் வீணாக சாலையில் தேங்கி கிடக்கிறது. குடிநீர் வீணாவதால் அப்பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படுகிறது. சாலையில் தேங்கி கிடக்கும் குடிநீரால் வாகன ஓட்டிகளும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஏற்பட்டுள்ள குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.