கூடலூர் தாலுகா பாடந்தொரையில் இருந்து ஆலவயல் செல்லும் சாலையில் முத்துமாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு உள்ளது. இதனால் தினந்தோறும் குடிநீர் வீணாகி சாலையில் ஓடுகிறது. அந்த இடத்தை, சாலையின் மீது கல் வைத்து இரும்பு கம்பியை நட்டு அடையாளப்படுத்தி உள்ளார்கள். ஆனால் உடைந்த குழாயை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் வாகன ஓட்டிகள் சிரமம் அடைகின்றனர். எனவே இனிமேலாவது அந்த குடிநீர் குழாய் உடைப்பை சரி செய்ய அதிகாரிகள் முன்வர வேண்டும்.