பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் வட்டம், நாரணமங்கலம் பகுதியில் ஏராளமான பொதுமக்கள் வசித்து வருகின்றனர். இங்குள்ள பொதுமக்களின் பயன்பாட்டிற்காக புதிததாக மேல்நிலை நீர்த்தேக்க குடிநீர் தொட்டி கட்டப்பட்டது. ஆனால் இன்றுவரை அந்த குடிநீர் தொட்டி பயன்பாட்டிற்கு வரவில்லை. மேலும் இப்பகுதியில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் குடிநீர் தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொள்கிறோம்.