தூர்வாரப்படுமா?

Update: 2025-12-28 07:16 GMT

பொற்றையடியில் இருந்து கொட்டாரம் வரை புத்தனார் கால்வாய் பாய்கிறது. இந்த கால்வாயில் ஆகாய தாமரை செடிகள் வளர்ந்து ஆக்கிரமித்து காணப்படுகிறது. இதனால், கால்வாயில் தண்ணீர் தேங்கி மாசடைந்து காணப்படுவதால் பொதுமக்கள் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, பொதுமக்கள் நலன்கருதி கால்வாயில் ஆக்கிரமித்துள்ள ஆகாயத்தாமரை செடிகளை அகற்றிட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


மேலும் செய்திகள்