மழைநீர் வடிகால் வேண்டும்

Update: 2025-12-28 11:44 GMT

மன்னார்குடி நகரம் வடசேரி ரோடு பகுதியில் ஸ்ரீநகர்,கிருஷ்ணா நகர் பகுதிகள் உள்ளன. இந்த பகுதியில் முறையான மழைநீர் வடிகால் வசதி இல்லை. இதன் காரணமாக மழைக்காலங்களில் சாலையில் மழை நீர் குளம் போல் தேங்கி நிற்கிறது. குடியிருப்பு பகுதிகளையும் மழை நீர் சூழ்ந்து கொள்கிறது. இதனால் அந்த பகுதியில் உள்ளவர்கள் மிகவும் அவதிக்குள்ளாகி வருகின்றன. தேங்கி கிடக்கும் மழை நீரில் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இவற்றால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு தொற்று நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் ஆய்வு செய்து மழைநீர் வடிகால் வசதி செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும் செய்திகள்