சேலம் பெரியார் மேம்பாலத்தின் கீழ் குடிநீர் தொட்டி வைக்கப்பட்டுள்ளது. தற்போது அந்த குடிநீர் தொட்டி பயன்படாமல் காட்சி பொருளாகவே உள்ளது. மேலும் குடிநீர் தொட்டியை சுற்றி குப்பைகள் எரிக்கப்பட்டு உள்ளது. இதனால் பொதுமக்கள் பெரும்பாலும் அப்பகுதிக்கு செல்வதில்லை. எனவே குடிநீர் தொட்டியை சரிசெய்து, அதனை சுற்றி குப்பைகள் எரிக்கப்படுவதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.