திருச்சி மாவட்டம் லால்குடி அடுத்த கூகூர் ஆனந்த்மேடு அய்யன் வாய்க்காலில் தார் சாலை அருகில் பெரிய குடிநீர் குழாய் உடைந்து குடிநீர் வீணாக சாலையில் செல்கிறது. மேலும் குடிநீர் சாலையில் தேங்குவதால் சாலை சேதம் அடைந்து வருகிறது. இதனால் வாகன ஓட்டிகள் அவதிப்பட்டு வருவதுடன், அப்பகுதி மக்கள் போதி குடிநீர் இன்றி அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.