பாலக்கோடு தாலுகாவிற்குட்பட்ட புலிகரை கிராமத்தில் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்பட்டது. ஆனால் அந்த சுத்திகரிப்பு நிலையம் இன்னும் பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வராமல் காட்சி பொருளாகவே உள்ளது. கோடை காலம் என்பதால் தண்ணீர் தேவை அதிகரித்துள்ள நிலையில் பொதுமக்களின் தாகம் தீர்க்கும் வகையில் அதிகாரிகள் உடனடியாக சுத்திகரிப்பு நிலையத்தை திறந்து மக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும்.
-செந்தில், புலிக்கரை.