கோபி அருகே மேவானி ஊராட்சியில் உள்ள குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதனால் அந்த பகுதியில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பொதுமக்கள் குடிநீரின்றி அவதிப்பட்டு வருகின்றனர். குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரிசெய்து அந்த பகுதியில் குடிநீர் வினியோகிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க முன்வருவார்களா?